ADDED : ஆக 17, 2026 09:03 PM
அ நிறம் | அளவு
வியாசர்பாடி: வியாசர்பாடி, ஜான் கென்னடி தெருவைச் சேர்ந்தவர் துரைராஜ், 54; தனியார் பள்ளி ஆசிரியர்.
இவர் பணி முடித்து, வீட்டுக்கு வரும் வழியில் வியாசர்பாடி பள்ளத்தெருவில் உள்ள சிலர் கிண்டல் செய்வது வழக்கமாக இருந்தது. இதுதொடர்பாக துரைராஜ், குடும்பத்தினர் சிலரை அழைத்துக் கொண்டு, கிண்டல் செய்த ரவிக்குமார், தீபக் ரோசன் மற்றும் அவர்களின் குடும்பத்தினருடன் கைகலப்பில் ஈடுபட்டார். இதுதொடர்பாக இருதரபபை சேர்ந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இருவரை தேடி வருகின்றனர்.
