/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு
/
லாரி சக்கரத்தில் சிக்கி பூ வியாபாரி உயிரிழப்பு
ADDED : நவ 14, 2025 03:14 AM
அம்பத்துார்: ஸ்கூட்டரில் சென்ற பூ வியாபாரி, லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
அம்பத்துார், ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர் விரிவாக்கம், மூகாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் சரவணன், 59; பூ வியாபாரி. இவரது மனைவி பேபி, 55; தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
இவர் பூ வாங்குவதற்காக, அம்பத்துார் சி.டி.எச்., சாலையில் இருந்து கோயம்பேடு நோக்கி, 'ஹோண்டா ஆக்டிவா' ஸ்கூட்டரில் நேற்று மதியம் சென்றுள்ளார்.
கனரா வங்கி சந்திப்பு அருகே செல்லும்போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது, அதே திசையில் சென்ற 'ஈச்சர்' லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது. இதில், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சரவணனின் உடலை பிரேத பரிசோதனைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, 'ஈச்சர்' லாரி ஓட்டுநரான காவாங்கரையைச் சேர்ந்த முனுசாமி, 56; என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

