தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு

உணவு வழங்கும் திட்டம் துாய்மை பணியாளர்களுடன் சாலை பணியாளர்களும் சேர்ப்பு


ADDED : நவ 09, 2025 04:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 09, 2025 04:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை:துாய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை, வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்கிறார். இத்திட்டத்தில், சாலை பணியாளர்களையும் சேர்க்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சிகளில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, இலவச உணவு வழங்கப்படும் என, ஆக., 4ம் தேதி அரசு அறிவித்தது. முதற்கட்டமாக, சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்களுக்கு, மூன்று ஆண்டுகளுக்கு உணவு வழங்க அரசாணை வெளியிடப்பட்டது.

இதன்படி, சென்னை மாநகராட்சியில், 30,000 பேருக்கு உணவு வழங்க, 186 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில், காலை 47, மதியம் 57, இரவு 42 ரூபாயில் உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை, வரும் 15ம் தேதி, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைக்க உள்ளார்.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் சாலை பணியாளர்களுக்கும் உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. மாநகராட்சியில், 1,800க்கும் மேற்பட்ட சாலை பணியாளர்கள் உள்ளனர்.

இவர்களில், மாற்றுப்பணியாக அலுவலக உதவியாளர், கணினி இயக்குபவர் போன்ற பணிகளில் ஈடுபடுவோருக்கு உணவு இல்லை. சாலையை சீரமைக்கும் பணியில் ஈடுபடுவோருக்கு மட்டும், உணவு வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us