/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாநகராட்சியில் முதல் முறையாக தலைமையிடத்தில் பெண் பொறியாளர்
/
மாநகராட்சியில் முதல் முறையாக தலைமையிடத்தில் பெண் பொறியாளர்
மாநகராட்சியில் முதல் முறையாக தலைமையிடத்தில் பெண் பொறியாளர்
மாநகராட்சியில் முதல் முறையாக தலைமையிடத்தில் பெண் பொறியாளர்
ADDED : ஏப் 27, 2025 01:48 AM
சென்னை:சென்னை மாநகராட்சியில், நிர்வாக காரணங்களுக்காக, ஐந்து தலைமை பொறியாளர்கள் உள்ளனர்.
அவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு துறைகள் ஒதுக்கப்படுகிறது. இவர்களின் அனைத்து கோப்புகளையும் பார்வையிட்டு, பொது தலைமை பொறியாளர் தான் ஒப்புதல் வழங்குவார்.
அதனால், தலைமை பொறியாளர்களிடையே, பொது தலைமை பொறியாளர் பணியிடத்திற்கு போட்டி நிலவும்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சியின் தலைமை பொறியாளராக இருந்த ராஜேந்திரன் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, விஜயகுமார் என்பவர், தலைமை பொறியாளராக இரண்டு மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்டார்.
விஜயகுமார் விரைவில் ஓய்வு பெற உள்ள நிலையில், கோப்புகளில் விரைந்து ஒப்புதல் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
பணியை தொடர்ந்து தாமதப்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, அவரை பணியிட மாற்றம் செய்து, மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
தற்போது, தலைமை பொறியாளராக தொடரும் விஜயகுமாருக்கு, திடக்கழிவு, மெக்கானிக்கல், சுகாதார தொடர்பான பணி, மயான பூமி, கழிப்பறை ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதேநேரம், பொது தலைமை பொறியாளராக ராஜேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
மாநகராட்சியில் பெண் ஒருவர், பொறியாளர்களுக்கான தலைமை பொறுப்பில் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இவருக்கு, பேருந்து தட சாலைகள், மண்டல ஒருங்கிணைப்பு, அரசு அறிவிப்புகள், நகரமைப்பு, சிங்கார சென்னை 2.0, சி.ஆர்.ஆர்.டி., உள்ளிட்ட துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.