/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெண் ஹிந்தி பிரசாரகர்கள் சங்கம் உருவாக்கம்
/
பெண் ஹிந்தி பிரசாரகர்கள் சங்கம் உருவாக்கம்
ADDED : ஏப் 17, 2025 12:33 AM

சென்னை, ஹிந்தி பிரசார சபா சார்பில், குழந்தைகளுக்கு ஹிந்தி மொழியை கற்பிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள, பெண் ஆசிரியைகளான பிரசாரகர்கள் இணைந்து, 'மெட்ராஸ் மகிளா ஹிந்தி பிரசார சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கி உள்ளனர்.
இந்த அமைப்பு, சென்னையை தலைமை இடமாக கொண்டு இயங்குகிறது. இதன் சென்னை உறுப்பினர்கள், சமீபத்தில், அயனாவரத்தில் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்வில், அம்பத்துார் பார் கவுன்சில் தலைவர் லட்சுமி ராஜரத்தினம், வழக்கறிஞர் பரணி அரிசி, கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
இதுகுறித்து, அதன் தலைமை பொறுப்பாளர் சாந்தி கோவிந்த் கூறியதாவது:
சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு, ஹிந்தி பாடம் உள்ளது. பெரும்பாலான பெற்றோருக்கு ஹிந்தி படிக்கவோ, எழுதவோ, பேசவோ தெரியாது.
அதேநேரம், குழந்தைகள் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஹிந்தி பாடங்களுக்கும், ஹிந்தி பிரசார சபாவின் சார்பில் நடத்தப்படும் தேர்வுகளுக்கும் பயிற்சி அளிக்க, அங்கீகாரம் பெற்ற ஆசிரியர்களாக, 15,000 பேர் உள்ளனர். அவர்களில், 97 சதவீதத்துக்கும் மேல் தமிழர்கள். அவர்களில், 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் பெண்கள்.
ஆனால், அவர்களுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. இந்த குறை நீண்ட காலம் இருந்தது. இதை போக்கும் வகையில், இந்த சங்கத்தை கடந்த ஆண்டே துவங்கினோம். தற்போது, 1,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.