/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.எல்.ஏ., ஆபீசில் திருட்டு முன்னாள் ஊழியர் கைது
/
எம்.எல்.ஏ., ஆபீசில் திருட்டு முன்னாள் ஊழியர் கைது
ADDED : ஜன 22, 2025 12:41 AM
அண்ணா நகர், அண்ணா நகர், 'ஏ' பிளாக் பகுதியில், அண்ணா நகர் தி.மு.க., - -- எம்.எல்.ஏ., மோகன் அலுவலகம் செயல்படுகிறது.
இந்த அலுவலக வளாகத்தில், மாநகராட்சிக்கு சொந்தமான கொசு மருந்து அடிக்க பயன்படுத்தும், நான்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. இந்த வாகனங்களில் இரண்டு பேட்டரிகள் திருடு போனது.
அலுவலகத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, மாநகராட்சி ஊழியராக பணிபுரிந்த ஒருவர் கூட்டாளியுடன் சேர்ந்து பேட்டரி திருடி செல்வது பதிவாகி இருந்தது. இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் நேற்று காலை எம்.எல்.ஏ., அலுவலக ஊழியர்கள் புகார் அளித்தனர்.
விசாரணையில், செனாய் நகரை சேர்ந்த வினோத்குமார் என்ற ராகுல், 34, என்பதும், இவர் ஏற்கனவே எம்.எல்.ஏ., அலுவலகத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றியவர் என்பதும் தெரிந்தது. போலீசார், வினோத்குமாரை நேற்று கைது செய்தனர்.