/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அ.தி.மு.க.,வில் இணைகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., வெங்கட்ராமன்
/
அ.தி.மு.க.,வில் இணைகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., வெங்கட்ராமன்
அ.தி.மு.க.,வில் இணைகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., வெங்கட்ராமன்
அ.தி.மு.க.,வில் இணைகிறார் 'மாஜி' எம்.எல்.ஏ., வெங்கட்ராமன்
ADDED : நவ 12, 2024 12:22 AM
சென்னை, முன்னாள் எம்.எல்.ஏ.,வும், சென்னை புறநகர் மாவட்ட அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழு செயலருமான வெங்கட்ராமன் தலைமையில், ஏராளமானோர் அ.தி.மு.க.,வில் இன்று இணைகின்றனர்.
கடந்த 2014ம் ஆண்டில், ஆலந்துார் தொகுதியில், தே.மு.தி.க., - எம்.எல்.ஏ.,வாக இருந்த பண்ருட்டி ராமச்சந்திரன், அக்கட்சியிலிருந்து விலகி, அ.தி.மு.க.,வில் இணைந்தார். காலியான ஆலந்துார் தொகுதிக்கு, கடந்த 2014ல் லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடந்தது. அத்தேர்தலில், தி.மு.க., வேட்பாளர் ஆர்.எஸ்.பாரதியை எதிர்த்து போட்டியிட்ட அ.தி.மு.க., வேட்பாளர் வெங்கட்ராமன் வெற்றி பெற்றார்.
இவர், முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் நடேசன் பால்ராஜின் மகன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப்பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவு பட்டபோது, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளராக, வெங்கட்ராமன் செயல்பட்டார். பன்னீர்செல்வத்தின் அ.தி.மு.க., உரிமை மீட்புக்குழுவில், சென்னை புறநகர் மாவட்ட செயலராக இருந்தார்.
இந்நிலையில், தன் ஆதரவாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்களுடன், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி முன்னிலையில், இன்று இணைகிறார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நேற்று பழனிசாமியை சந்தித்து, இணைப்பு நிகழ்ச்சி நடத்துவது குறித்து, வெங்கட்ராமன் பேசியதாக கூறப்படுகிறது.

