/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மீன் சந்தை வியாபாரிகளை மிரட்டும் அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனரிடம் முன்னாள் எம்.பி., புகார்
/
மீன் சந்தை வியாபாரிகளை மிரட்டும் அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனரிடம் முன்னாள் எம்.பி., புகார்
மீன் சந்தை வியாபாரிகளை மிரட்டும் அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனரிடம் முன்னாள் எம்.பி., புகார்
மீன் சந்தை வியாபாரிகளை மிரட்டும் அதிகாரிகள் மாநகராட்சி கமிஷனரிடம் முன்னாள் எம்.பி., புகார்
ADDED : மே 17, 2025 09:56 PM
சென்னை:சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையில் உள்ள வியாபாரிகளை, மாநகராட்சி மற்றும் போலீஸ் அதிகாரிகள் மிரட்டி வருவதாக, முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,யும் மார்க்கெட் உரிமையாளருமான ஜெ.எம்.ஹாரூன் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் பிரகாஷிடம், மீன் சந்தையின் உரிமையாளரும், முன்னாள் காங்கிரஸ் எம்.பி.,யுமான ஜெ.எம்.ஹாரூன் புகார் மனு அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தையை விலைக்கு வாங்கி, ஒன்பது ஆண்டுகளாக சிறந்த முறையில் நடத்தி வருகிறேன். இதனால், சிந்தாதிரிப்பேட்டை பூங்கா ரயில் நிலையம் அருகே, மாநகராட்சி சார்பில் கட்டப்பட்ட நவீன மீன் அங்காடியை, போட்டியாக கருதவில்லை.
ஆனால், எனது மீன் சந்தையை காலி செய்வதற்காக, தி.மு.க., பகுதி செயலர் மதன்மோகன், அக்கட்சியின் பிரமுகர்கள் இளையராஜா, மகேஷ் ஆகியோர் அதிகாரிகளை துாண்டி விடுகின்றனர். சந்தைக்கு வாகனங்களில் எடுத்து வரப்படும் மீன் பெட்டிகளை மொத்தமாக கூவம் ஆற்றில் வீசப்போவதாக மிரட்டுகின்றனர். மாநகராட்சி அதிகாரிகளையும், காவல் துறை அதிகாரிகளையும் ஏவி, வியாபாரிகளை மிரட்டுகின்றனர்.
சந்தை அமைந்திருக்கும் சாலை அகலமான ஒரு வழிபாதை. மீன் சந்தைக்கு அதிகாலை 3:00 மணி முதல் காலை 6:00 மணி வரை, மக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சரக்கு வாகனங்கள் வந்து மீன் பெட்டிகளை இறக்கி செல்கின்றன. ஆனாலும், சரக்கு வாகனங்களில் இருந்து மீன் பெட்டிகளை இறக்க விடாமல் மாநகராட்சி அதிகாரிகள் தொல்லை கொடுக்கின்றனர். எனவே இப்பிரச்னையில் தலையிட்டு, யாருக்கும் பாரபட்சமின்றி அதிகாரிகளை நடந்து கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை மீன் சந்தைக்கு அரசு அதிகாரிகளை ஏவி தி.மு.க.,வினர் நெருக்கடி ஏற்படுத்தி வருவதால், அங்குள்ள வியாபாரிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது:
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி தி.மு.க.,வின் கோட்டையாக இதுவரை இருந்து வந்தது. ஆனால், தி.மு.க.,வினர் அதிகாரிகளை ஏவி அடாவடி செய்கின்றனர். வியாபாரிகளின் அதிருப்தியால், தி.மு.க.,வின் ஓட்டுகள் சரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில மாதங்களில் நடக்க உள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வினருக்கு தகுந்த பாடம் புகட்ட, ஆளும்கட்சியினரால் பாதிக்கப்பட்டோர் காத்திருக்கின்றனர்.
இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.