ADDED : நவ 26, 2024 12:57 AM
சேத்துப்பட்டு, சைதாப்பேட்டை, மேட்டுபாளையத்தைச் சேர்ந்தவர் காமேஷ், 22. இவர், தனியார் நிறுவனத்தில் 'ஹவுஸ் கிப்பிங்' பணிபுரிந்து கொண்டு, பகுதி நேரமாக மேளம் அடிக்கும் தொழில் செய்கிறார்.
இவர், நேற்று முன்தினம் நுங்கம்பாக்கம், சாஸ்திரி நகர் பகுதியில், துக்க வீட்டில் மேளம் அடித்துவிட்டு, சேத்துப்பட்டில் உள்ள காஜா என்பவரிடம் மேளத்தை ஒப்படைத்தார்.
அப்போது, சேத்துப்பட்டு எஸ்.எம்., சாலை வழியாக நடந்து வந்த காமேஷை வழிமறித்த ரவுடி சாந்தகுமார், அவரது கூட்டாளிகள், துக்க வீட்டில் சரியாக மேளம் அடிக்கவில்லை எனக் கூறி, தகராறு செய்துள்ளனர்.
பின், கல்லால் காமேஷ் தலையில் அடித்தனர். காயமடைந்த அவர் அங்கிருந்து தப்பி, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். புகாரை விசாரித்த சேத்துப்பட்டு போலீசார், பழைய குற்றவாளியான சேத்துப்பட்டு எம்.எஸ்., நகரைச் சேர்ந்த சாந்தகுமார், 24, என்பவரை நேற்று கைது செய்தனர். அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
