/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.1 கோடியில் வார்டு அலுவலகம் கட்ட அடிக்கல்
/
ரூ.1 கோடியில் வார்டு அலுவலகம் கட்ட அடிக்கல்
ADDED : மே 09, 2025 01:00 AM
திருவொற்றியூர், மணலி மண்டலம், 22வது வார்டிற்கு புதிதாக வார்டு அலுவலகம் கட்டடம் கட்டித்தர வேண்டும் என, கவுன்சிலர் தீர்த்தி கோரிக்கை விடுத்திருந்தார்.
அதன்படி, ஒரு கோடி ரூபாய் செலவில், முதல் தளத்துடன் கூடிய புதிய கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை, நேற்று காலை நடந்தது.
மணலி, சின்னசேக்காடு - தேவராஜன் தெருவில் நடந்த விழாவில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சங்கர், மணலி மண்டலக்குழு தலைவர் ஆறுமுகம், கவுன்சிலர் தீர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்று, அடிக்கல் நாட்டினர்.
தற்போது, தற்காலிக கட்டடத்தில் கவுன்சிலர் அலுவலகம் இயங்கி வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், அந்த கட்டடத்தின் கண்ணாடி ஜன்னல்கள் உடைக்கப்பட்டு, கணினி உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது குறிப்பிடத்தக்கது.