/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அடிக்கல்
/
அரசு பாலிடெக்னிக் கல்லுாரிக்கு அடிக்கல்
ADDED : ஜூன் 17, 2025 12:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவொற்றியூர், திருவொற்றியூரில் பஸ் நிலையம் அருகே, கூட்டுறவுக்கு சொந்தமான இடத்தில், 27.50 கோடி ரூபாய் செலவில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரி கட்டுமான பணிக்கான பூமி பூஜை நேற்று காலை நடந்தது.
இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., - கே.பி.சங்கர் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.
தொடர்ந்து, வார்டு 11ல், காலடிப்பேட்டை, அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியான, 99 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட மூன்று கூடுதல் வகுப்பறை கட்டடங்களை திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மண்டல குழு தலைவர் தனியரசு, உதவி கமிஷனர் விஜய்பாபு, கவுன்சிலர்கள் சரண்யா, பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.