தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ரூ.2 கோடி நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் 

 ரூ.2 கோடி நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் 

 ரூ.2 கோடி நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் 


ADDED : மார் 12, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 12, 2026 05:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநின்றவூர்: திருநின்றவூர் நகராட்சியில் நான்கு வார்டுகளில், 15வது மத்திய நிதி குழு மானியத்தில் இருந்து 52 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், 11 மண் சாலைகள், சிமென்ட் சாலையாக மாற்றப்படுகின்றன.

பிரகாஷ் நகரில், 96 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 லட்சம் லி., கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி; பெரிய காலனியில் 31 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பொது கழிப்பிடம் அமைக்கும் பணி துவங்க உள்ளது.

மேலும், இந்திரா நகரில்எம்.எல்.ஏ., நிதியில் 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 மின் மோட்டார்களுடன் கூடிய ஆழ்துளை கிணறு உட்பட 2 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகளுக்கு, நேற்று அடிக்கல் நாட்டப்பட்டது.

தொடர்ந்து, வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் திருநின்றவூரில் வசிக்கும் 111 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவை, அமைச்சர் நாசர் நேற்று வழங்கினார்.

நிகழ்ச்சியில், திருநின்றவூர் நகராட்சி கமிஷனர் ஜீவிதா, ஆவடி தாசில்தார் கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us