/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.8.40 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல்
/
ரூ.8.40 கோடி திட்ட பணிகளுக்கு அடிக்கல்
ADDED : மே 16, 2025 12:23 AM
வில்லிவாக்கம்,:வடசென்னை வளர்ச்சி திட்டத்தில், வில்லிவாக்கம், திருநகர் பகுதியில், 90 லட்சம் ரூபாய் மதிப்பில், 1,679 சதுர அடியில் மகளிருக்கான உடற்பயிற்சி கூடம், மாடவிதியில் 1.50 கோடி ரூபாயில், போதை மறுவாழ்வு மையம் உள்ளிட்ட திட்டபணிகளுக்கு, அமைச்சர் சேகர்பாபு, நேற்று அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற, மேயர் பிரியா கூறியதாவது:
தென் சென்னைக்கு சமமாக, வடசென்னையில் வளர்ச்சி திட்ட பணிகள் நடந்து வருகின்றன.
கடந்த 10 ஆண்டு கால அ.தி.மு.க., ஆட்சியில் சென்னை மாநகராட்சி உடன் இணைக்கப்பட்ட பகுதிகளில், 131 பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகளாக மாற்றப்படாமல் இருந்தது. அவற்றையெல்லாம் தற்போது மாநகராட்சி பள்ளிகளாக மாற்றி உள்ளோம்.
இந்தாண்டு மாநகராட்சி பள்ளிகளில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 88 சதவீதமாக உள்ளது. வரும் ஆண்டில், 90 சதவீதத்தை கடக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.