/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சட்ட பயிற்சி மைய நிறுவனர் சிக்கினார்
/
சட்ட பயிற்சி மைய நிறுவனர் சிக்கினார்
ADDED : ஜூன் 24, 2025 12:30 AM

வேளச்சேரி,
வேளச்சேரி, அம்பிகா தெருவில் வழக்கறிஞர் சந்திரசேகர், 50, என்பவர் 'சந்துரு லா அகாடமி' என்ற பெயரில், நீதிபதிக்கான போட்டி தேர்வு நடத்தும் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.
இவர், அந்த மையத்தில் படிக்கும் 23 வயது மாணவிக்கு, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். மாணவியை அழைத்து தகாத வார்த்தையில் பேசி, தனியாக இரவு அலுவலகம் வா என அழைத்துள்ளார். இதை மறுத்து, மையத்தில் இருந்து மாணவி வெளியேறுவதாக கூறியபோது, வழக்கறிஞர் பதிவை ரத்து செய்துவிடுவேன் என மிரட்டி உள்ளார்.
இது குறித்து, 23 வயது மாணவி மற்றும் வேறு சில மாணவியரும், சந்திரசேகர் மற்றும் அலுவலக உதவியாளர் மாயா, 35, ஆகியோர் மீது, வேளச்சேரி போலீசில் புகார் அளித்தனர். பெண் வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், இருவரையும் தேடினர். இந்த நிலையில், நேற்று, கிண்டியில் தலைமறைவாக இருந்த சந்திரசேகரை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாயாவை தேடி வருகின்றனர்.