/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
டீ வியாபாரி மண்டையை உடைத்த நான்கு பேர் கைது
/
டீ வியாபாரி மண்டையை உடைத்த நான்கு பேர் கைது
ADDED : மே 30, 2025 12:22 AM
சென்னை :சேப்பாக்கம், விக்டோரியா விடுதி பகுதியில் வசித்த வருபவர் சரவணன், 27. அப்பகுதியில் சைக்கில் சென்று, டீ விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 27ம் தேதி இரவு, மெரினாவில் கண்ணகி சிலை பின்புறம் மணற்பரப்பில் உறங்கச் சென்றார்.
மறுநாள் அதிகாலை, 1:30 மணியளவில் ஐந்து பேர் மிகவும் சத்தம்போட்டு விளையாடிக் கொண்டிருந்தனர். இதை, சரவணன் தட்டிக் கேட்டார்.
இதனால், ஆத்திரமடைந்த ஐந்து பேரும், கீழே கிடந்த மதுபாட்டிலை எடுத்து, அவரது மண்டையில் அடித்து உடைத்து தப்பினர். காயமடைந்த சரவணன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
இதுகுறித்து, மெரினா போலீசார் வழக்கு பதிந்து, வியாபாரியை தாக்கிய, சேப்பாக்கத்தைச் சேர்ந்த மணி, 22, பிரசாந்த், 29, மனோகர், 26, அசோக்குமார், 22 ஆகிய நான்கு பேரையும் நேற்று கைது செய்தனர்.