ADDED : அக் 31, 2025 12:18 AM
வியாசர்பாடி:  வியாசர்பாடி, ரேணுகாம்பாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி, 55. இவரது இரண்டாவது மகள் மகேஸ்வரிக்கு, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மணி என்பவருடன் திருமணமாகி, தர்ஷன், 4, என்ற மகன் உள்ளார்.
கணவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்துவந்த மகேஸ்வரி, அதே பகுதியைச் சேர்ந்த ரவுடி சரத், 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, சேர்ந்து வாழ்ந்து வந்துள்ளார்.
ஒரு மாதத்திற்கு முன், மகேஸ்வரிக்கு துபாயில் வேலை கிடைத்ததால், மகன் தர்ஷனை, தன் அம்மா லட்சுமியிடம் விட்டு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரத், நான்கு வயது சிறுவன் தர்ஷனை, 17ம் தேதி கடத்திச் சென்றார்.
புகாரின்படி விசாரித்த எம்.கே.பி., நகர் போலீசார், மஞ்சம்பாக்கத்தில் இருந்த சிறுவன் தர்ஷனை மீட்டு, பாட்டியிடம் ஒப்படைத்தனர். தலைமறைவான சரத்தை போலீசார் தேடி வந்தனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் இரவு, தன் நண்பர்களுடன் சேர்ந்து, லட்சுமி வீட்டிற்கு சென்ற சரத், கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
இது குறித்து தகவலறிந்த எம்.கே.பி., நகர் போலீசார், வியாசர்பாடி, சர்மா நகரைச் சேர்ந்த சரத், ராஜ்குமார், 30, பி.வி., காலனியைச் சேர்ந்த ராஜ்குமார், 22, கொடுங்கையூரைச் சேர்ந்த விக்கி என்ற மாவு விக்கி, 21, ஆகிய நால்வரையும், நேற்று கைது செய்தனர்.

