/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மெட்ரோ ரயில் பணி தளத்தில் இரும்பு திருடிய நால்வர் கைது
/
மெட்ரோ ரயில் பணி தளத்தில் இரும்பு திருடிய நால்வர் கைது
மெட்ரோ ரயில் பணி தளத்தில் இரும்பு திருடிய நால்வர் கைது
மெட்ரோ ரயில் பணி தளத்தில் இரும்பு திருடிய நால்வர் கைது
ADDED : ஏப் 24, 2025 12:20 AM
ஆதம்பாக்கம், ஆதம்பாக்கம், ஏரிக்கரை அருகில், மெட்ரோ ரயில் கட்டுமானம் நடைபெறும் இடத்தில் இருந்த இரும்பு பொருட்களை, நேற்று முன்தினம் நான்கு பேர் திருடி, மீன்பாடி வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தனர்.
அப்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள், அதை பார்த்து கூச்சலிட்டனர். திருடிய இரும்புடன் அவர்கள் தப்பி செல்ல முயன்றனர்.
ஆனால், பணியாளர்களும் பொதுமக்களும் சேர்ந்து, அவர்களை சுற்றி வளைத்து பிடித்து ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்த திருட்டு தொடர்பாக, கட்டுமான பணி மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அளித்த புகாரின்படி, ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.
அதில், திருட்டில் ஈடுபட்டது, பல்லாவரம், நரிக்குறவர் காலனியை சேர்ந்த துரைமுருகன், 24, சரத்குமார், 25, துரை, 23, பார்த்திபன், 21, என்பது தெரியவந்தது. பின், நால்வரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

