/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சீனாவுக்கு எறும்பு தின்னி கடத்த முயன்ற நான்கு பேர் கைது
/
சீனாவுக்கு எறும்பு தின்னி கடத்த முயன்ற நான்கு பேர் கைது
சீனாவுக்கு எறும்பு தின்னி கடத்த முயன்ற நான்கு பேர் கைது
சீனாவுக்கு எறும்பு தின்னி கடத்த முயன்ற நான்கு பேர் கைது
ADDED : மே 21, 2025 12:32 AM

தாம்பரம், ஆந்திராவில் இருந்து இரண்டு எறும்பு தின்னிகளை சீனாவுக்கு கடத்த முயன்ற நான்கு பேரை, தாம்பரம் வனத்துறையினர் பிடித்து, சிறையில் அடைத்தனர்.
சென்னை திருவொற்றியூரில் இருந்து, மூவர், இரண்டு எறும்பு தின்னிகளை, தாம்பரம் முடிச்சூருக்கு கொண்டு வந்து, அங்கிருந்து சீனாவுக்கு கடத்த திட்டமிட்டுள்ளதாக, தாம்பரம் வனத்துறையினருக்கு, வன உயிரின குற்றத்தடுப்பு பிரிவினர் தகவல் தெரிவித்தனர்.
தாம்பரம் வனச்சரகர் வித்யாபதி தலைமையிலான வனத்துறையினர், நேற்று முன்தினம் மதியம், வண்டலுார் வெளிவட்ட சாலை வழியாக வந்த ஒரு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றனர். பழைய பெருங்களத்துார், அம்பேத்கர் சிலை அருகே ஆட்டோவை நிறுத்தி, அங்கிருந்த ஒருவரிடம், ஆட்டேவில் வந்தவர்கள் எறும்பு தின்னிகளை ஒப்படைத்தனர்.
அப்போது, வனத்துறையினர், நான்கு பேரையும் பிடித்தனர். எறும்பு தின்னிகளை பறிமுதல் செய்த வனத்துறையினர், நான்கு பேரையும் கைது செய்தனர். ஆட்டோ, இரண்டு இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையில், திருவொற்றியூரை சேர்ந்த 40-45 வயதுள்ள மூன்று பேர் ஐந்து நாட்களுக்கு முன், ஆந்திர மாநிலம், நெல்லுாரில் இருந்து, இரண்டு எறும்பு தின்னிகளை பிடித்து, சென்னை திருவொற்றியூருக்கு கொண்டு வந்தது தெரிந்தது. அவற்றை, 40 லட்சம் ரூபாயக்கு பேசி, தாம்பரம் முடிச்சூரை சேர்ந்த 48 வயதுடைய ஒருவர் மூலம் சீனாவுக்கு கடத்த திட்டமிட்டனர். எறும்பு தின்னி கும்பலின் தலைவன் கேரளாவில் உள்ளார்.
கடத்தல் கும்பலின் தலைவன் கேரளாவில் இருப்பதால், கைது செய்யப்பட்ட நான்கு பேரின் பெயர்களை வெளியிட்டால், கேரள நபர் உஷாராகி தலைமறைவாகி விடுவார் என்பதால், பெயர்களை வனத்துறையினர் வெளியிடவில்லை. கைது செய்யப்பட்டவர்களின் மொபைல் போன்களை வனத்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த கும்பல், எறும்பு தின்னி மட்டுமின்றி இரிடியம், சந்தன மரம் கடத்தல் உள்ளிட்ட பல கடத்தல் சம்பவங்களில் ஈடுபட்டு வருவதும் தெரிந்தது. கேளராவில் உள்ள கடத்தல் கும்பல் தலைவனை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
****