தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பெண்ணுக்கு மிரட்டல் நான்கு பேருக்கு காப்பு

பெண்ணுக்கு மிரட்டல் நான்கு பேருக்கு காப்பு

பெண்ணுக்கு மிரட்டல் நான்கு பேருக்கு காப்பு


ADDED : செப் 11, 2026 09:33 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2026 09:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.கே.நகர், செப். 12–

வீடு புகுந்து பெண்ணுக்கு மிரட்டல் விடுத்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.

கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பரத்குமார். அதே பகுதியை சேர்ந்த தர்மா என்பவரும், மற்றொரு வழக்கில் சிறையில் உள்ளார். முன்விரோதம் காரணமாக இருவருக்கும் கடந்தாண்டு கைகலப்பானது.

இந்த நிலையில், தர்மாவின் கூட்டாளிகளான அஜித் உள்ளிட்ட ஐந்து பேர், கடந்த 6ம் தேதி, பரத் வீட்டிற்கு சென்று அவரது மனைவி காயத்ரி, 22,க்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்த புகாரை அடுத்து விசாரித்த ஆர்.கே.நகர் போலீசார், அஜித், 29, உட்பட நான்கு பேரை நேற்று கைது செய்தனர். கிசா வினோத் என்பவர் தலைமறைவானார்.

இந்த நிலையில், கைதானவர்களுக்காக வழக்கறிஞர் ஜெயந்தி தலைமையிலான 15 பேர், ஆர்.கே.நகர் காவல் நிலையத்திற்கு நேற்று மதியம் வந்து, பொய் வழக்கு போட்டு கைது செய்வதாக கூறி கோஷமிட்டனர்.

அப்போது, போலீசாரை அவதுாறாக பேசியதாக, ஜெயந்தியின் தாய் வள்ளி, 43, சகோதரர் திருமலை, 22, ஆகியோரை போலீசார் மடக்கி பிடித்த போது, இரு தரப்பினரிடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் இருவரையும் எச்சரித்து அனுப்பினர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள கிசா வினோத், வழக்கறிஞர் ஜெயந்தியின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us