/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குற்றச்சாட்டில் சிக்கிய நான்கு இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
/
குற்றச்சாட்டில் சிக்கிய நான்கு இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
குற்றச்சாட்டில் சிக்கிய நான்கு இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
குற்றச்சாட்டில் சிக்கிய நான்கு இன்ஸ்., காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
ADDED : டிச 24, 2025 05:23 AM

வளசரவாக்கம்: அரசு மினி பேருந்தில் 7ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் சீண்டல் நடந்த விவகாரத்தில், உரிய நடவடிக்கை எடுக்காத மகளிர் போலீஸ் இன்ஸ்., உட்பட நான்கு இன்ஸ்பெக்டர்கள், காத்திருப்போர் பட்டியலுக்கு நேற்று மாற்றப்பட்டனர்.
வளசரவாக்கத்தில், அரசு சிற்றுந்தில் பயணித்த 7ம் வகுப்பு மாணவியிடம், இம்மாதம் 19ம் தேதி, நடந்துநர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து வளசரவாக்கம் மகளிர் போலீசார் முறையாக விசாரிக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், நடத்துநரை கைது செய்ய கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த பலர், மாணவியின் பெற்றோருடன் சேர்ந்து, வளசரவாக்கம் காவல் நிலையம் முன், சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதன் எதிரொலியாக, வளசரவாக்கம் மகளிர் போலீஸ் இன்ஸ்., ஆனந்தியை, கமிஷனர் அருண் உத்தரவின்படி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
வளசரவாக்கத்தில் ஒரு விடுதியில், குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசார் சமீபத்தில் சோதனை நடத்தி, சூதாட்டத்தில் ஈடுபட்ட, 17 பேர் கும்பலை பிடித்தனர். அவர்களிடம் இருந்து 10,500 ரூபாய், 26 மொபைல் போன்கள், 3.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 'பிளேயிங் காயின்' உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களை, வளசரவாக்கம் சட்டம் - ஒழுங்கு இன்ஸ்., அன்புக்கரசனிடம் ஒப்படைத்தனர். அவர், மூவர் மீது மட்டும் வழக்கு பதிந்து, 4,000 ரூபாய் மட்டும் பறிமுதல் செய்ததாக, உயர் அதிகாரியிடம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இன்ஸ்பெக்டரின் இந்த தில்லுமுல்லு அறிந்த இணை கமிஷனர் திஷா மிட்டல், கமிஷனர் அருணிடம் தெரிவித்தார். இதையடுத்து அன்புக்கரசன், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.
அதேபோல், பணம் பிரச்னை தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டில் மாதவரம் குற்றப்பிரிவு இன்ஸ்., சரவணன் சிக்கினார். புகார்தாரரிடம் லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கோயம்பேடு மகளிர் இன்ஸ்., தாஹீரா சிக்கினார்.
தொடர் குற்றச்சாட்டில் சிக்கிய இந்த நான்கு இன்ஸ்பெக்டரையும், நேற்று ஒரே நாளில், காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

