/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கத்தியுடன் சுற்றிய நான்கு பேர் கைது
/
கத்தியுடன் சுற்றிய நான்கு பேர் கைது
ADDED : ஏப் 17, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வியாசர்பாடி,
வியாசர்பாடி உதயசூரியன் நகரில், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், கத்தியுடன் மர்ம நபர்கள் சுற்றி திரிவதாக, எம்.கே.பி.நகர் போலீசாருக்கு நேற்று, பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.
போலீசார் அங்கு சென்று, கத்தியுடன் சுற்றித் திரிந்த கொளத்துார், மகாத்மா காந்தி நகர், இரண்டாவது தெருவை சேர்ந்த, பழைய குற்றவாளியான தனித், 21; வியாசர்பாடி, உதயசூரியன் நகரை சேர்ந்த சிவா, 45; தினகரன், 39; முத்துவேல், 24 ஆகிய நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.