/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பேர் சிக்கினர்
/
போதைப்பொருள் வைத்திருந்த நான்கு பேர் சிக்கினர்
ADDED : ஜன 29, 2025 12:27 AM
சென்னை, நுங்கம்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் இரவு, வள்ளுவர்கோட்டம்,வாட்டர் டேங்க் அருகே கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருத்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டிருந்த மூவரை பிடித்து விசாரித்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் சோதனை செய்தனர்.
இதில், 4.5 கிராம் எடையிலான மெத் ஆம்பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது தெரிந்தது. ராயப்பேட்டையைச் சேர்ந்த வினோஷ் ஆனந்த், 32, மயிலாப்பூரைச் சேர்ந்த சக்தி வாசுதேவன், 34, அசோக்நகரைச் சேர்ந்த நிதிஷ்குமார், 26 ஆகிய மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.
அதேபோல், சிவானந்தா சாலையில் மெத் ஆம் பெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த, முகமது அல்தாப், 27 என்பவரை திருவல்லிக்கேணி போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடம் இருந்து, 14.5 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டன.