/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செங்கையில் இரு விபத்து 3 வாலிபர் உட்பட 4 பேர் பலி
/
செங்கையில் இரு விபத்து 3 வாலிபர் உட்பட 4 பேர் பலி
ADDED : ஜன 29, 2025 12:30 AM

கூவத்துார், செங்கல்பட்டு மாவட்டம், கூவத்துார் அடுத்த மலையூரைச் சேர்ந்தவர் சேகர், 50. இவர், நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு, டி.வி.எஸ்., எக்ஸ்.எல்., மொபட்டில், பரமேஸ்வரமங்கலத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன், 32, என்பவருடன் கல்பாக்கம் சென்றார்.
பணி முடிந்து வீட்டிற்கு வந்தபோது, வேப்பஞ்சேரி சாலை சந்திப்பில் திரும்பினர். அப்போது, கூவத்துாரில் இருந்து கல்பாக்கம் நோக்கிச் சென்ற டிப்பர் லாரியின் பக்கவாட்டில், இவர்களது மொபட் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், சேகர் மற்றும் ராமச்சந்திரன் பலத்த காயமடைந்தனர். லாரி டிரைவர், வாகனத்தை நிறுத்தி தப்பினார்.
சம்பவ இடத்திற்கு வந்த கூவத்துார் போலீசார், இருவரையும் மீட்டு ஆம்புலன்ஸ் வாயிலாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அன்றைய தினம் இரவு சேகர் உயிரிழந்தார். நேற்று காலை, ராமச்சந்திரனும் உயிரிழந்தார். கூவத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.
நேருக்குநேர் மோதல்
மதுராந்தகத்தைச் சேர்ந்தவர் ஜீவகுமார், 25. இவர், நேற்று இரவு 'யமஹா ஆர்15' பைக்கில், மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தின் மீது சென்றுள்ளார்.
அப்போது, மதுராந்தகம் அடுத்த ஜமீன் எண்டத்துார் பகுதியைச் சேர்ந்த வசந்த், 29, என்பவர், மதுராந்தகத்தில் இருந்து ஜமீன் எண்டத்துார் நோக்கி, 'ஹீரோ ஹோண்டா ஸ்பிளண்டர் பிளஸ்' பைக்கில் வந்துள்ளார்.
மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில், எதிர்பாராத விதமாக இரண்டு பைக்குகளும் நேருக்குநேர் மோதின. இதில், சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்தனர். இது குறித்து மதுராந்தகம் போலீசார் விசாரிக்கின்றனர்.