/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை
/
நில மோசடி 4 பேருக்கு ஓராண்டு சிறை
ADDED : ஜூலை 05, 2025 11:58 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, நில மோசடி வழக்கில், நான்கு பேருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து, சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோயம்பேடில், நாகம்மாளுக்கு சொந்தமான, 31 சென்ட் இடத்தை, 1983ல், தாமஸ் ஆபிரகாம் வாங்கினர். போலி ஆவணம் தயாரித்து, அமைந்தகரை ஆனந்தி, குபேரன், அம்பத்துார் கார்த்திகா, அரும்பாக்கம் மணிமேகலை ஆகிய நான்கு பேரும் இடத்தை அபகரித்தனர்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்தனர்.வழக்கை விசாரித்த, எழும்பூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஆனந்தி உட்பட நான்கு பேருக்கும், ஓராண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.