/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரியாணி கடைக்காரர் உட்பட இருவரை தாக்கி வழிப்பறி 4 பேருக்கு 'காப்பு'
/
பிரியாணி கடைக்காரர் உட்பட இருவரை தாக்கி வழிப்பறி 4 பேருக்கு 'காப்பு'
பிரியாணி கடைக்காரர் உட்பட இருவரை தாக்கி வழிப்பறி 4 பேருக்கு 'காப்பு'
பிரியாணி கடைக்காரர் உட்பட இருவரை தாக்கி வழிப்பறி 4 பேருக்கு 'காப்பு'
ADDED : அக் 15, 2025 02:14 AM
சென்னை, : கே.கே.நகரில், பிரியாணி கடைக்காரரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
கே.கே.நகர் இ.எஸ்.ஐ., மருத்துவமனை அருகே பிரியாணி கடை நடத்தி வருபவர் பிரபு, 35. கடந்த 13ம் தேதி அதிகாலை கோயம்பேடு செல்வதற்காக, கே.கே.நகர், வன்னியர் தெரு வழியாக பைக்கில் சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் மூன்று பேர் பிரபுவை வழிமறித்து, கட்டையால் தாக்கி கத்திமுனையில் 4,300 ரூபாய் பறித்து சென்றனர். காயமடைந்த பிரபு, கே.கே.நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
விசாரித்த கே.கே.நகர் போலீசார், வழிப்பறியில் ஈடுபட்ட கே.கே.நகரைச் சேர்ந்த அபிஷேக், 25, போரூரைச் சேர்ந்த நரேன், 25, தேனாம்பேட்டையைச் சேர்ந்த பிரகாஷ், 43 ஆகிய, மூன்று பேரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட மூவர் மீதும், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.
மற்றொரு சம்பவம் கோடம்பாக்கத்தைச் சேர்ந்தவர் கணேசன், 58. இவர், கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனி 4வது குறுக்கு தெருவில், காயலான் கடை நடத்தி வருகிறார்.
கடந்த 12ம் தேதி இரவு கடையில் வியாபாரம் முடித்து, கடையை மூடிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த பாலாஜி என்பவர் கணேசனிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
கணேசன் பணம் தர மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த பாலாஜி, அவரை கையால் தாக்கி கத்திமுனையில், கல்லாவில் இருந்த 5,000 ரூபாயை பறித்து சென்றார்.
இது குறித்து விசாரித்த கோடம்பாக்கம் போலீசார், நந்தனத்தைச் சேர்ந்த பாலாஜி, 29 என்பவரை கைது செய்தனர். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 14 வழக்குகள் உள்ளன.