/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மாணவி கூட்டு பலாத்காரம் நான்கு மாணவர்கள் கைது
/
மாணவி கூட்டு பலாத்காரம் நான்கு மாணவர்கள் கைது
ADDED : ஜன 05, 2025 12:26 AM
மேல்மருவத்துார், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் காவல் எல்லைக்கு உட்பட்ட கிராமத்தில், அரசு உதவி பெறும் பள்ளியில், மாணவி ஒருவர் பத்தாம் வகுப்பு படிக்கிறார்.
அவரை, பத்தாம் வகுப்பு பயிலும் மூன்று மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர் ஒருவரும், கடந்த மாதம் பலாத்காரம் செய்துள்ளனர்.
அதை வீடியோவில் பதிவு செய்து, மாணவியை மிரட்டி மீண்டும் பலாத்காரம் செய்துள்ளனர். பின், வீடியோவை பிற நண்பர்களுக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது.
நேற்று முன்தினம் மேல்மருவத்துார் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர். வழக்கு பதிவு செய்த மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட நான்கு மாணவர்களை போக்சோ வழக்கில் நேற்று கைது செய்து, செங்கல்பட்டு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, இளஞ்சிறார் சிறையில் அடைத்தனர்.