/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குடியிருப்பு மின்துாக்கியில் சிக்கிய தவித்த நால்வர் மீட்பு
/
குடியிருப்பு மின்துாக்கியில் சிக்கிய தவித்த நால்வர் மீட்பு
குடியிருப்பு மின்துாக்கியில் சிக்கிய தவித்த நால்வர் மீட்பு
குடியிருப்பு மின்துாக்கியில் சிக்கிய தவித்த நால்வர் மீட்பு
ADDED : மே 30, 2025 12:24 AM
சென்னை, :தி.நகர், முத்துரங்கன் தெருவில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதன் இரண்டாவது தளத்தில் குடும்பத்துடன் வசிப்பவர் பாஸ்கரன், 60.
நேற்று முன்தினம், குடும்பத்துடன் வெளியே சென்று, இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு திரும்பினார்.
கீழ் தளத்திலிருந்து, இரண்டாவது தளத்திற்கு மின்துாக்கியில் சென்றபோது, திடீரென பழுதடைந்து பாதியில் நின்றது.
உடனே, காவல் கட்டுப்பாட்டு அவசர உதவி எண்ணை தொடர்பு கொண்ட பாஸ்கரன், மின்துாக்கியில் சிக்கியது குறித்து கூறினார்.
மாம்பலம் தீயணைப்பு படையினர் மற்றும் காவல் குழுவினர் வந்து, மின்துாக்கியில் சிக்கிய பாஸ்கரன் உட்பட நான்கு பேரை பத்திரமாக மீட்டனர்.