/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மா னை வேட்டையாடிய நரிக்குறவர் கைது
/
மா னை வேட்டையாடிய நரிக்குறவர் கைது
ADDED : நவ 17, 2025 03:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
- நமது நிருபர் -: மானை வேட்டையாடி ய நரிக்குறவரை, வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
கல்பாக்கம் அடுத்த வாயலுார் அருகிலுள்ள பகுதியில், நேற்று காலை நரிக்குறவர் ஒருவர் மானை வேட்டையாடிய தாக, திருக்க ழுக்குன்றம் வனத்துறையினருக்கு தகவல் தெரிந்தது.
அங்கு சென்ற வனத்துறையினர், வேட்டையாடி இறந்த மானுடன் இரண்டு பேர் இருந்ததை கண்டனர். வனத்துறையினரை பார்த்ததும், ஒருவர் தப்பிச் சென்றார்.
பிடிபட்ட மற்றொருவர், மாமல்லபுரத்தைச் சேர்ந்த கோகுலகண்ணன், 30, என தெரிந்தது.
அவரை கைது செய்து விசாரிக்கின்றனர். மானை வேட்டையாடி தப்பியது, மாமல்லபுரம் பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவர் சத்யா என தெரிந்த து. போலீசார் அவரை தேடி வருகின்றனர்.

