ADDED : செப் 22, 2024 10:03 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி, சைபர் கிரைம் மோசடி முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி முயற்சியில் ஈடுபட்டோர், மொபைல் போன் வாட்ஸாப் - டி.பி.,யில் கமிஷனரின் புகைப்படத்தை வைத்துள்ளனர். அதன் வாயிலாக பண மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து சென்னை நபர் ஒருவர், காவல் துறை 'எக்ஸ்' தள பக்கத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக, சென்னை போலீசார் விசாரிக்கின்றனர். 'பண மோசடியில் ஈடுபட முயன்ற சைபர் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என போலீசார் தெரிவித்தனர்.