ADDED : செப் 23, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை : சென்னை போலீஸ் கமிஷனர் அருண், இவரது பெயர் மற்றும் புகைப்படத்தை பயன்படுத்தி, சைபர் கிரைம் மோசடி முயற்சியில் மர்ம நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.
மோசடி முயற்சியில் ஈடுபட்டோர், மொபைல் போன் வாட்ஸாப் - டி.பி.,யில் கமிஷனரின் புகைப்படத்தை வைத்துள்ளனர்.
அதன் வாயிலாக பண மோசடி முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து சென்னை நபர் ஒருவர், காவல் துறை 'எக்ஸ்' தள பக்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்த மோசடி முயற்சி தொடர்பாக, சென்னை போலீசார் தீவிரமாக விசாரித்துவருகின்றனர்.