/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நடிகர் சுகுமார் மீது மோசடி வழக்கு
/
நடிகர் சுகுமார் மீது மோசடி வழக்கு
ADDED : ஏப் 19, 2025 11:53 PM
மாம்பலம்,'காதல்' திரைப்படம் மூலம் அறிமுகமானவர் காதல் சுகுமார். இவர், மதுரவாயல், கிருஷ்ணா நகரில் வசித்து வருகிறார். இந்நிலையில், சுகுமார் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 7 லட்சம் ரூபாய் வரை பெற்று, மோசடி செய்துவிட்டதாக, துணை நடிகை ஒருவர் கடந்த ஜனவரி மாதம், வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
மேலும், பணத்தை திருப்பி கேட்டதற்கு, வீட்டிற்கு வந்து மிரட்டல் விடுத்தார் என, அந்த புகாரில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த புகார் மாம்பலம் மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. போலீசார் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இதையடுத்து, காதல் சுகுமார் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம், மோசடி, பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

