/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குரூப் - 2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
/
குரூப் - 2, 2ஏ தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
ADDED : ஜூலை 31, 2025 12:42 AM
சென்னை,அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும், குரூப் - 2, 2ஏ தேர்வுகளுக்கு, நாளை முதல் இலவச வகுப்புகள் துவங்குகின்றன.
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால், குரூப் - 2, 2ஏ தேர்வுக்காகான, 645 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இயங்கும், தன்னார்வ வட்டத்தில், நாளை முதல் துவங்குகிறது. வகுப்புகள் திங்கள் முதல் வெள்ளி வரை நடக்கும்.
தேர்வுக்கு விண்ணப்பித்தோர், விண்ணப்ப நகலுடன், கிண்டி, மாவட்ட வேவைாய்ப்பு அலுவலகத்தை நேரடியாக அணுகலாம். மேலும் விபரங்களுக்கு, decgc.coachingclass@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புக் கொள்ளலாம் என, சென்னை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

