sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 ரயில்வே 'குரூப் - டி' தேர்வுக்கு இலவச பயிற்சி

/

 ரயில்வே 'குரூப் - டி' தேர்வுக்கு இலவச பயிற்சி

 ரயில்வே 'குரூப் - டி' தேர்வுக்கு இலவச பயிற்சி

 ரயில்வே 'குரூப் - டி' தேர்வுக்கு இலவச பயிற்சி


ADDED : பிப் 18, 2026 06:12 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: ரயில்வே தேர்வு வாரியத்தின் 'குரூப் - டி' தேர்வுக்கு தயாராகி வரும் தேர்வர்களுக்கான இலவச பயிற்சி, நாளை துவக்கப்படும் என, சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை:

ரயில்வே தேர்வு வாரியத்தின், 'குரூப் - டி' தேர்வின் பல்வேறு பணிகளில் 22,195 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கான தேர்வு, வரும் மார்ச் 2ம் தேதி நடக்க உள்ளது.

இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், சென்னை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், நாளை காலை 10:30 மணிக்கு துவங்க உள்ளன. வாரந்தோறும் மாதிரி தேர்வுகளும் மற்றும் மாநில முழு மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/sRVKQJ2QUFj6rxLn7 என்ற படிவத்தில் பூர்த்தி செய்ய வேண்டும். தகவல்களுக்கு, கிண்டி மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில் நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us