sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

501 இடங்களில் மழைநீர் அகற்றம்: அம்மா உணவகத்தில் இலவச உணவு

/

501 இடங்களில் மழைநீர் அகற்றம்: அம்மா உணவகத்தில் இலவச உணவு

501 இடங்களில் மழைநீர் அகற்றம்: அம்மா உணவகத்தில் இலவச உணவு

501 இடங்களில் மழைநீர் அகற்றம்: அம்மா உணவகத்தில் இலவச உணவு


UPDATED : அக் 17, 2024 07:25 AM

ADDED : அக் 17, 2024 12:29 AM

Google News

UPDATED : அக் 17, 2024 07:25 AM ADDED : அக் 17, 2024 12:29 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னையில் சராசரியாக பெய்த 15 செ.மீ., மழையால், 542 இடங்களில் மழைநீர் தேங்கியது. அவற்றில், 501 இடங்களில் அகற்றப்பட்ட நிலையில், 41 இடங்களில் வெள்ள பாதிப்பு நீடிக்கிறது.

சென்னையில் இரண்டு நாள் பெய்த மழையால், 542 இடங்களில், 4 அடிக்கு மேல் மழைநீர் தேங்கியது. மழைநீரை அகற்றும் பணியில், 19,000க்கும் மேற்பட்ட பணியாளர்கள் சுழற்சி முறையில் ஈடுபடுத்தப்பட்டனர். வெள்ள நீர் அகற்ற 1,223 மோட்டார் பம்புகள் பயன்படுத்தப்பட்டன. இதன் வாயிலாக, 501 இடங்களில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது.

அதேநேரம், வடிநில பகுதியான பள்ளிக்கரணை மற்றும் தாழ்வான பகுதிகளான பட்டாளம் உள்ளிட்ட 41 இடங்களில், வெள்ள பாதிப்பு நீடிக்கிறது. அங்கும் மழைநீர் அகற்றும் பணி தொடர்கிறது.

மீட்பு பணிக்காக, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 180 வீரர்கள் உட்பட, 103 படகுகள் தயார் நிலையில் உள்ளது. நிவாரண முகாம்களில் தஞ்சமடைந்த 900க்கும் மேற்பட்டோருக்கும், மழைநீர் தேங்கிய பகுதிளில் சிக்கிய மக்களுக்கும் என, 11.84 லட்சம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

சென்னையின் புறநகர் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மட்டுமே மழைநீர் தேக்கம் காணப்படுகிறது. அங்கு, மோட்டார்கள் வைத்து நீர் வெளியேற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அப்பணிகள் விரைவில் முடிவடையும்.

பெரும்பாலான இடங்களில், மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதால், 20 செ.மீ., மழை பெய்தாலும் குறுகிய நேரத்தில் வடிந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ளவர்களுக்கு தொடர்ந்து உணவு வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், 388 அம்மா உணவகங்களில், இரண்டு நாட்கள் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. அதில், ஒரு வேளைக்கு சராசரியாக 60,000 பேர் பயனடைந்து வருகின்றனர்.

கட்டுப்பாட்டு அறைக்கு, 6,963 அழைப்புகள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அம்மா உணவகங்களில் இன்றும் இலவச உணவு வழங்கப்பட உள்ளது.

சாய்ந்த 77 மரங்கள்

சென்னையில் பெய்த மழையால் மூன்று நாட்களில் 77 மரங்கள் வேரோடு சாய்ந்து, அகற்றப்பட்டுள்ளன. மழையால் தேங்கியுள்ள குப்பை கழிவை அகற்றும் வகையில், 15,000 துாய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கூடுதலாக, பிற மாவட்டங்களில் இருந்து, 500 பேர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us