தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இலவச யோகா பயிற்சி

 இலவச யோகா பயிற்சி

 இலவச யோகா பயிற்சி


ADDED : பிப் 15, 2026 06:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 15, 2026 06:26 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சத்யானந்தா யோகா மையத்தின், சன்யாசி கிருஷ்ண யோகம் சார்பில், இலவச யோகா வகுப்புகள், சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக வரும், 19ம் தேதி மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவில் அடுத்த வெங்கிலி அம்மன் கோவில், 20ம் தேதி வேளச்சேரி, திருவீதி அம்மன் கோவில் தெருவில் உள்ள அம்மன் கோவிலில், யோகா வகுப்பு துவங்குகிறது.

வரும், 21ல் நங்கநல்லுார், லட்சுமிநகர் பிரதான சாலையில் உள்ள சுதர்ஷன் டேரஸ் ஹால், 22ல் கே.கே.நகரில், அய்யப்பன் மற்றும் கோ சாலா கிருஷ்ணன் கோவில், சாஸ்தா சங்கத்தில் துவங்கி, நான்கு வாரங்கள் நடத்தப் படுகிறது.

ஆசனம், பிரணாயாமம், ஐம்புலன் அடக்கம் எனும் பிரத்தியாகாரம், தாரணா மந்திரம், உணவு பழக்க வழக்கம், உடல் உள்ளுறுப்புகள் பாதுகாத்தல் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட உள்ளன.

வார நாட்களில் தினம் காலை 5:30 மணி முதல் 7:00 மணி வரை நடத்தப்படுகிறது.

ஆர்வமுள்ளோர் 94450 51015 என்ற மொபைல் எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என, அம்மையம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us