/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது
/
தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டது
ADDED : மார் 27, 2025 11:41 PM

தாம்பரம், அரக்கோணத்தில் இருந்து கார்களை ஏற்றி செல்லும் சரக்கு ரயில், பராமரிப்பு பணிக்காக, மூன்று வாரங்களுக்கு முன், தாம்பரம் யார்ட் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.
பராமரிப்பு பணி முடிந்து, நேற்று இரவு 7:00 மணிக்கு, அந்த ரயில், அரக்கோணத்திற்கு செல்வதற்காக, எழும்பூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லும் மெயின் லைனுக்கு இயக்கப்பட்டது.
அப்போது, 26 பெட்டிகள் கொண்ட அந்த ரயிலின் 5 பெட்டிகள், மெயின் லைனுக்குள் வந்த நிலையில், இடையில் இருந்த மூன்று பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.
இதையடுத்து, ரயில்வே அதிகாரிகள் விரைந்து, தடம் புரண்ட ரயிலை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
'வீல் அலைன்மென்ட்' சரியாக சர்வீஸ் செய்யாததே, ரயில் தடம் புரண்டதற்கு காரணம் என கூறப்படுகிறது.
சரக்கு ரயில் தடம் புரண்டதால், எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி சென்ற கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ், 10 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
தொடர்ந்து, அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும், மின்சார ரயில்கள் செல்லும் தண்டவாளத்தில் திருப்பி விடப்பட்டன.