தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

தாம்பரத்தில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து


UPDATED : ஜூன் 13, 2026 07:23 PM

ADDED : ஜூன் 13, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 13, 2026 07:23 PM ADDED : ஜூன் 13, 2026 07:02 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாம்பரம்: தாம்பரம் ரயில் நிலைய பணிமனைக்கு, ஜல்லிக்கற்கள் ஏற்றி வந்த சரக்கு ரயில் இன்ஜினின் சக்கரம் தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

எழும்பூரில் ஜல்லிக்கற்களை ஏற்றிய 16 பெட்டிகள் அடங்கிய சரக்கு ரயில், நேற்று மதியம், தாம்பரத்திற்கு வந்தது. தாம்பரம் பணிமனை பகுதியில் அந்த ரயிலை நிறுத்தி, ஜல்லிக்கற்களை கொட்டினர்.

ஒவ்வொரு பெட்டியாக ஜல்லியை கொட்டியபோது, எதிர்பாராதவிதமாக இன்ஜினின் முன்பக்க சக்கரம், தண்டவாளத்தில் இருந்து இறங்கி, தடம் புரண்டது.

சுதாரித்த ஓட்டுநர், உடனடியாக ரயிலை நிறுத்தி, ஜல்லிக்கற்களுடன் இருந்த பெட்டிகளை, ரயிலில் இருந்து துண்டித்தார். தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அவர்கள் வந்து, தடம் புரண்ட ரயில் இன்ஜினின் சக்கரத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதனால், மற்ற ரயில் சேவையில் எந்த பாதிப்பு ஏற்படவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us