sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 சிட்கோ நகர் சாலையில் அடிக்கடி விபத்து

/

 சிட்கோ நகர் சாலையில் அடிக்கடி விபத்து

 சிட்கோ நகர் சாலையில் அடிக்கடி விபத்து

 சிட்கோ நகர் சாலையில் அடிக்கடி விபத்து


ADDED : ஜன 29, 2026 05:23 AM

Google News

ADDED : ஜன 29, 2026 05:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லிவாக்கம்: பல்வேறு பணிகளால் மோசமான சிட்கோ நகர் பிரதான சாலைகளில், விபத்துகள் அதிகம் நடப்பதாக, பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

அண்ணா நகர் மண்டலம், 94வது வார்டில் வில்லிவாக்கம், சிட்கோ நகரில், பிரதான சாலைகள் உட்பட 100 தெருக்கள் உள்ளன.

இங்கு, ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்றன.

இங்குள்ள ஒன்று மற்றும் நான்காவது பிரதான சாலைகளில், மழைநீர் வடிகால்வாய், மின் வாரியம் மற்றும் குடிநீர் வாரியம் சார்பில் பள்ளம் தோண்டி, பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பணிகள் முடிந்த பின்னரும், சாலைகள் முறையாக சீரமைக்கப்படவில்லை. சாலைகள் முழுதும் குண்டும் குழியுமாக மாறி, போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளன.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.

இரவில், சாலையில் உள்ள குழிகள் தென்படாததால், விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக, வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us