/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு 'அம்மா' உணவகத்திற்கு பாதுகாப்பு
/
ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு 'அம்மா' உணவகத்திற்கு பாதுகாப்பு
ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு 'அம்மா' உணவகத்திற்கு பாதுகாப்பு
ஊழியர்கள் இடையே அடிக்கடி தகராறு 'அம்மா' உணவகத்திற்கு பாதுகாப்பு
ADDED : டிச 06, 2024 12:34 AM

ராமாபுரம், வளசரவாக்கம் மண்டலம், ராமாபுரம் 155வது வார்டில், பஜனை கோவில் தெரு, பாரதி சாலை மற்றும் திருமலை நகர் ஆகிய மூன்று இடங்களில், 'அம்மா' உணவகம் இயங்கி வருகிறது.
இந்த உணவகங்களில், அ.தி.மு.க., மற்றும் தி.மு.க.,வைச் சேர்ந்த பெண்கள் பணிபுரிகின்றனர். இருதரப்பு பெண் ஊழியர்கள் இடையே, அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வருகிறது.
இதனால், பஜனை கோவில் தெருவில் உள்ள அம்மா உணவகத்தின் நான்கு ஊழியர்களை, பாரதி சாலை அம்மா உணவகத்திற்கு, மாநகராட்சியால் இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இவர்களை, பணியில் சேர்த்துகொள்ள, பாரதி சாலை அம்மா உணவகத்தில் உள்ளவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில், பாரதி சாலை உணவகத்தின் பதிவேடுகளையும், பொருட்கள் வைக்கும் அறையை பூட்டி சாவியையும், உணவக தலைவி சுமதி, நேற்று முன்தினம் எடுத்து சென்றார்.
இதனால், அம்மா உணவகத்தில் மாலை நேர உணவு விற்பனை பாதித்ததாகவும், சுமதியிடம் இருந்து உணவக சாவி மற்றும் பதிவேடுகளை பெற்று தர கோரி, சுகாதார ஆய்வாளர் விக்னேஷ்வரன், ராமாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அன்று மாலை, இந்த உணவகத்தில் இரும்பு கம்பியுடன் நுழைந்த மர்ம நபர், பொருட்கள் வைக்கும் அறையின் பூட்டை உடைத்ததால், பரபரப்பு ஏற்பட்டது.
தொடர் பிரச்னைகள் ஏற்பட்டு வருவதால், கைகலப்பு நிகழாமல் இருக்க, போலீஸ்காரர் ஒருவர், பாரதி சாலை உணவகத்தில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
சுமதி கூறுகையில், ''சுகாதார ஆய்வாளர் என்னை, தரக்குறைவாக பேசி, அம்மா உணவக சாவி மற்றும் பதிவேடுகளை கேட்டார். அதனால் எடுத்து சென்றேன்,'' என்றார்.