/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அடிக்கடி மின் தடை: மணலிபுதுநகர் மக்கள் அவதி
/
அடிக்கடி மின் தடை: மணலிபுதுநகர் மக்கள் அவதி
ADDED : அக் 20, 2025 04:40 AM
மணலிபுதுநகர்: மணலிபுதுநகரில், அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், தீபாவளி கொண்டாட முடியாமல், மக்கள் தவிப்பிற்கு ஆளாகியுள்ளனர்.
மணலி மண்டலம், 15வது வார்டின், மணலிபுதுநகர், பொன்னியம்மன் நகர், ஐ.ஜே.புரம் உள்ளிட்ட பகுதிகளில், 5,000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.
பின், இரவு, 9:00 மணிக்கு நிலைமை சீரானது. நேற்று காலையிலும், இரண்டு மணி நேரமாக மின்தடை ஏற்பட்டதால், மக்கள் தவிப்பிற்கு ஆளாகினர்.
இன்று தீபாவளி கொண்டாடப்படவிருக்கும் நிலையில், மின் தடை பிரச்னை தொடர்வதால், கொசுக்கடி உள்ளிட்ட காரணங்களால், மக்கள் வீடுகளில் இருக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
மின்தடை குறித்து, அதிகாரிகளுக்கு, தகவல் தெரிவிக்க போன் செய்தால், யாரும் போனை கூட எடுப்பதில்லை என, பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, மின் தடை பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.