/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
40 ஆண்டு கழிவுநீர் குழாய்கள் மாற்றாததால் அடிக்கடி பிரச்னை
/
40 ஆண்டு கழிவுநீர் குழாய்கள் மாற்றாததால் அடிக்கடி பிரச்னை
40 ஆண்டு கழிவுநீர் குழாய்கள் மாற்றாததால் அடிக்கடி பிரச்னை
40 ஆண்டு கழிவுநீர் குழாய்கள் மாற்றாததால் அடிக்கடி பிரச்னை
ADDED : ஜூலை 08, 2025 12:23 AM
ஜாபர்கான்பேட்டை, ஜாபர்கான்பேட்டை பகுதியில் 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட கழிவுநீர் மற்றும் குடிநீர் குழாய்களை மாற்றி, புதிதாக அமைக்க, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோடம்பாக்கம் மண்டலம் ஜாபர்கான்பேட்டை 139வது வார்டுக்கு உட்பட்ட சேகர் நகர் - 11 தெருக்கள்; எத்திராஜ் நகர் - 7 தெருக்கள்; முத்துரங்கன் பிளாக் - 8 தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில், 40 ஆண்டுகளுக்கு முன் குடிநீர் மற்றும் கழிவுநீர் குழாய்கள் புதைக்கப்பட்டன.
அப்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப 6 அங்குலம் குழாயாக பதிக்கப்பட்டன.
தற்போது மக்கள் தொகை அதிகரித்துள்ளதால், அந்த குழாய்களில் செல்லும் அதிகப்படியான குடிநீர், கழிவுநீரால் அழுத்தம் தாங்காமல் அவ்வப்போது உடைப்பு ஏற்படுகிறது.
இதனால், குழாய் உடைந்து சாலையில் கழிவுநீர் கசிவதும், குடிநீரில் கழிவுநீர் கலந்து, அதை பயன்படுத்துவோர் பாதிக்கப்படும் சம்பவமும் அதிகரித்து வருகிறது.
இதுகுறித்து புகார் அளித்தால், சாலைகளில் பள்ளம் தோண்டி, குழாய் சீரமைப்பு பணிகளை, குடிநீர் வாரியத்தினர் மேற்கொள்கின்றனர். எனினும், இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியவில்லை.
ஆனால், இப்பணிகளால் சாலையும் குண்டும் குழியுமாக மாறி, வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
எனவே, இப்பகுதியில் உள்ள கழிவுநீர் குழாயை மாற்றி, புதிதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.