/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சின்னத்திரை நடிகை வீட்டில் நகை திருடிய தோழி கைது
/
சின்னத்திரை நடிகை வீட்டில் நகை திருடிய தோழி கைது
சின்னத்திரை நடிகை வீட்டில் நகை திருடிய தோழி கைது
சின்னத்திரை நடிகை வீட்டில் நகை திருடிய தோழி கைது
ADDED : டிச 28, 2025 05:20 AM

கே.கே.: கே.கே., நகரில், சின்னத்திரை துணை நடிகை வீட்டில் நகை திருடிய, அவரது தோழியை, போலீசார் கைது செய்தனர்.
கே.கே.நகர், ஆற்காடு சாலையைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி, 34; 'டிவி' துணை நடிகை. இம்மாதம் 19ல், வீட்டில் வைத்திருந்த தங்க நகைகளை சரிபார்த்தபோது, 7 சவரன் நகைகள் மாயமானது தெரிந்தது.
இதுகுறித்த புகாரையடுத்து, கே.கே., நகர் போலீசார் விசாரணையில், ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த ஜெயலட்சுமியின் தோழி மோனிஷா, 30, என்பவர், இரு வாரங்களுக்கு முன் ஜெயலட்சுமியின் வீட்டில் தங்கியபோது நகைகளை திருடியது தெரியவந்தது.
அவரை, நேற்று கைது செய்தனர். அவரிடமிருந்து இரண்டு செயின், ஒரு டாலர் என, 7 சவரன் நகைகளை, போலீசார் பறிமுதல் செய்தனர்.