ADDED : மார் 29, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
சைதாப்பேட்டை: திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர் மதன்குமார், 39. இவர், 2016ம் ஆண்டு, சைதாப்பேட்டையைச் சேர்ந்த வேலு என்பவரை கொலை செய்தார்.
சைதாப்பேட்டை போலீசார், மதன்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். ஜாமினில் வெளிவந்த இவர், பல மாதங்களாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல், வெளி மாநிலங்களில் தலைமைறைவாக இருந்தார்.
இவர் மீது, ஜனவரி மாதம் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது. நேற்று முன்தினம், வீட்டுக்கு வந்த இவரை, போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
