sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வாகனங்கள்... 'மக்கர்' உடலை வைத்து தள்ள ஆட்களை தேடும் ஓட்டுநர்கள்

/

மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வாகனங்கள்... 'மக்கர்' உடலை வைத்து தள்ள ஆட்களை தேடும் ஓட்டுநர்கள்

மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வாகனங்கள்... 'மக்கர்' உடலை வைத்து தள்ள ஆட்களை தேடும் ஓட்டுநர்கள்

மருத்துவமனைகளில் அமரர் ஊர்தி வாகனங்கள்... 'மக்கர்' உடலை வைத்து தள்ள ஆட்களை தேடும் ஓட்டுநர்கள்


ADDED : அக் 23, 2025 11:24 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:24 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இறந்தோரின் உடல்களை, அரசு மருத்துவமனைகளில் இருந்து எடுத்துச் செல்ல பயன்படுத்தப்படும் அரசின் அமரர் ஊர்திகள் அடிக்கடி 'மக்கர்' செய்வதால் சிரமம் ஏற்படுகிறது. உடல்களை வாகனங்களில் ஏற்றியப்பின், சிறிது துாரம் தள்ளி 'ஸ்டார்ட்' செய்ய வேண்டியிருப்பதால், அதன் ஓட்டுநர்களும், உறவினர்களும் பரிதவிக்கின்றனர். அரசு மருத்துவமனைகளில் இறந்தோரின் உடலை, சொந்த ஊர்களுக்கு எடுத்துச் சென்று ஒப்படைக்க, அரசின் அமரர் ஊர்திகள் சேவை செயல்பாட்டில் உள்ளது.

இச்சேவையை, மக்கள் நல்வாழ்வு துறையுடன் இணைந்து, இ.எம்.ஆர்.ஐ., 'கிரீன் ஹெல்த் சர்வீஸ்' நிறுவனம் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, மாநிலம் முழுதும், 194 அமரர் ஊர்திகள் செயல்பாட்டில் உள்ளன. அவற்றில், தினமும் 450 உடல்கள் எடுத்து சென்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது. இச்சேவையை, '155 377' என்ற எண்ணை அழைப்பதன் மூலம் மக்கள் இலவசமாக பெற்று வருகின்றனர்.

எப்போதும் சிக்கல் இந்நிலையில், சென்னை போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள அமரர் ஊர்திகள் மிகவும் பழுதடைந்து காணப்படுவதால், 'ஸ்டார்ட்' ஆகாமல், ஒவ்வொரு முறையும் 'மக்கர்' செய்து வருகின்றன.

குறிப்பாக, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் ஆறு அமரர் ஊர்திகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மூன்று வாகனங்களை இயக்குவதில், எப்போதும் சிக்கல் உள்ளது.

வாகனங்களில், இறந்தோரின் உடல்கள் ஏற்றப்பட்டப்பின், 'ஸ்டார்ட்' ஆகாததால், அருகில் உள்ளவர்களை அழைத்து, வாகனத்தை சில துாரம் தள்ளவைத்து, ஓட்டுநர்கள் இயக்குகின்றனர். தினமும் இதே நிலை தொடர்வதால், ஓட்டுநர்களும், இறந்தவர்களின் உறவினர்களும் அல்லல்பட்டு வருகின்றனர்.

இது குறித்து, அமரர் ஊர்தி ஓட்டுநர்கள் கூறியதாவது:

அவசர கால '108' ஆம்புலன்ஸ் சேவையில் இயங்கி வந்த வாகனங்கள் தான், பின்னாளில் அமரர் ஊர்தியாக பயன்படுத்தப்படுகின்றன. இதனால், மாநிலம் முழுதும் உள்ள பெரும்பாலான அமரர் ஊர்திகள் பழுதடைந்துள்ளன. எனவே, அவற்றை இயக்குவதில் சிக்கல் உள்ளது.

சில நேரம் வாகனம் பாதியில் நின்றாலும், இறந்தவர்களின் உறவினர்கள், அருகில் உள்ளவர்களை அழைத்து தான், வாகனத்தை தள்ளி ஸ்டார்ட் செய்ய வேண்டியுள்ளது. உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தாலும் கண்டுகொள்வதில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

புதிய அமரர் ஊர்திகள் அவசர கால 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநில செயல் திட்ட தலைவர் செல்வகுமார் கூறியதாவது:

சென்னையில் இருந்து, திருச்சியை தாண்டி, தென் மாவட்டங்களுக்கு தினமும், எட்டு உடல்கள் அமரர் ஊர்திகளில் எடுத்துச் செல்லப்படுகின்றன.

பெரும்பாலான அமரர் ஊர்திகள் நன்றாகவே உள்ளன. ஏற்கனவே, 108 ஆம்புலன்ஸ் சேவையில் பயன்படுத்திய வாகனங்கள்தான், அமரர் ஊர்தியிலும் பயன்படுத்தப்படுவதால், சில வாகனங்கள் அவ்வப்போது பழுது ஏற்படக்கூடும்.

இந்நிலையை தவிர்க்க, 37 புதிய அமரர் ஊர்திகள் வாங்கப்பட்டுள்ளன. அதில், உடலை எடுத்து செல்வதற்கு, 'குளிர்சாதன பெட்டி' பொருத்தும் பணி நடந்து வருகிறது.

அடுத்த வாரத்தில் இருந்து, அவை செயல்பாட்டிற்கு வரும். அதன்பின், பழுதடைந்த வாகனங்கள், அமரர் ஊர்தி சேவையில் இருந்து நீக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us