ADDED : ஜூன் 29, 2025 10:36 PM
சென்னை:மாபெரும் பர்னிச்சர் கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது.
'பர்னிச்சர் அண்டு லைப் ஸ்டைல் எக்ஸ்போ' என்ற பெயரில், நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பர்னிச்சர் மற்றும் வீட்டு உபயோக பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடந்து வருகிறது.
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல நிறுவனங்களின் தயாரிப்புகள் 100 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
கண்காட்சி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறுகையில், ''வீட்டுத் தேவைக்கு மட்டுமன்றி, அலுவலக பயன்பாட்டிற்கும் உரிய, 20க்கும் மேற்பட்ட முன்னணி பிராண்டுகள் மற்றும் 1,200க்கும் மேற்பட்ட வடிவமைப்புகளில், அனைத்து வகை பர்னிச்சர்களும் பாதி விலைக்கு விற்கப்படுகிறது.
தவிர, வீட்டு அலங்கார பொருட்களும் விற்பனை செய்யப்படுகின்றன. கடன் வசதியும் உண்டு. இன்று கடைசி நாள்; வாய்ப்பை தவறவிடாதீர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.