/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ராணுவ வீரர்களுக்கு 15 சதவீத தள்ளுபடி 'ஜி ஸ்கொயர்' அறிவிப்பு
/
ராணுவ வீரர்களுக்கு 15 சதவீத தள்ளுபடி 'ஜி ஸ்கொயர்' அறிவிப்பு
ராணுவ வீரர்களுக்கு 15 சதவீத தள்ளுபடி 'ஜி ஸ்கொயர்' அறிவிப்பு
ராணுவ வீரர்களுக்கு 15 சதவீத தள்ளுபடி 'ஜி ஸ்கொயர்' அறிவிப்பு
ADDED : மே 17, 2025 12:09 AM
சென்னை, மே 17-
'வீட்டு மனை திட்டங்களில், மனை வாங்கும் ராணுவ வீரர்களுக்கு, 15 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்' என, 'ஜி ஸ்கொயர்' நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, 'ஜி ஸ்கொயர்' ரியல்டர்ஸ் நிர்வாக இயக்குனர் பால ராமஜெயம் கூறியதாவது:
நம் படை வீரர்கள், சுயநலம் இன்றி தேசம் மற்றும் மக்களின் பாதுகாப்பை இலக்காக வைத்து, தங்கள் வாழ்க்கையை தேசத்திற்காக அர்ப்பணிக்கின்றனர்.
அவர்களை கவுரவிக்கும் வகையில், எங்கள் வீட்டு மனை திட்டங்களில், அவர்கள் வாங்கும் இடங்களுக்கு, 15 சதவீத சலுகையை வழங்க உள்ளோம்.
இது, அவர்களின் கனவு இல்லத்தை வாங்க உறுதுணையாக இருக்கும். இந்த சலுகை குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கப்படும். இதில், முன்னாள் படை வீரர்களும் பயன்பெறலாம். தங்கள் பெயரில் மட்டுமல்ல, தங்கள் குடும்பத்தினர் பெயரிலும் பதிவு செய்து கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.