ADDED : ஜன 24, 2025 12:18 AM
அ நிறம் | அளவு
யானைக்கவுனி, சென்ட்ரல், வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஹோட்டலில் பணம் வைத்து சூதாட்டம் நடப்பதாக, யானைக்கவுனி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் இரவு தனிப்படை போலீசார், அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, சீட்டுக்கட்டு பயன்படுத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கொண்டிதோப்பு பாஸ்கர், 42, எம்.கே.பி., நகர் தினகரன், 60, கொளத்துார் ஆனந்தகிருஷ்ணன், 65, ஏழுகிணறு ஆறுமுகம், 50, புழல் ஆதிபிரகாஷ், 48, உட்பட, 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து, 226 டோக்கன்கள், 16 சீட்டுக்கட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
