/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கந்தசஷ்டி கோடி அர்ச்சனை திருவிழா விமரிசை
/
கந்தசஷ்டி கோடி அர்ச்சனை திருவிழா விமரிசை
ADDED : நவ 04, 2024 04:15 AM
பாரிமுனை:பாரிமுனையில் கந்தகோட்டம் கந்தசுவாமி கோவில் எனும் முத்துக்குமார சுவாமி தேவஸ்தானம் உள்ளது.
இங்கு, கந்தசஷ்டி திருவிழா 2ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் இவ்விழாவில், ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து, சுவாமியை தரிசிப்பர்.
இரண்டாவது நாளான நேற்று காலை, முத்துக்குமார் சுவாமி சிறப்பு அபிஷேக, புஷ்ப அலங்காரம் நடந்தது. கந்தசஷ்டி கோடி அர்ச்சனை திருவிழா நடந்தது.
இதில், மூலவர், உற்சவர், ஞான தண்டாயுதபாணி, ஆறுமுகம் ஆகிய சன்னிதிகளில் அர்ச்சனை செய்யப்பட்டது. 1,008 சகஸ்ரநாம மந்திரங்கள் படிக்கப்பட்டன.
வேத பாராயணம், திருமுறை பாராயணம் உள்ளிட்ட வைபவங்களுடன், கோடி அர்ச்சனை, மிக சிறப்பாக நேற்று நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் சுவாமி வீதி உலா நடந்தது.
கோவில் கலையரங்கத்தில், முரளிதரண் குழுவினரின் இன்னிசை, ஜே.சிவரஞ்சினி குழுவினரின் பக்தி பாடல்கள், ஆசிரியர்கள் கீதாராணி, மஞ்சு ஸ்ரீ, ஸ்ரீ சங்கீத வித்யாலயா சரிகம இசை பள்ளி மாணவர்களின் நாட்டிய நிகழ்ச்சியும் நேற்று நடந்தது.
முக்கிய நிகழ்வான 7ம் தேதி மாலை 6:00 மணிக்கு சூரசம்ஹார விழாவும், 8ல் தெய்வானை திருக்கல்யாணமும் நடக்கிறது.