/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பா.ஜ., பிரமுகர் உட்பட மூவரை வெட்டிய கும்பல்
/
பா.ஜ., பிரமுகர் உட்பட மூவரை வெட்டிய கும்பல்
ADDED : ஜூன் 17, 2025 12:28 AM
போரூர், போரூர் அடுத்த தண்டலம், அண்ணா நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த், 29; பா.ஜ., மதுரவாயல் மண்டல தலைவர். இவரது நண்பர்கள் சக்திவேல், 31, மற்றும் பூபதி, 19. மூவரும் நேற்று முன்தினம் இரவு, அய்யப்பன்தாங்கல், பத்மாவதி நகர் இரண்டாவது தெருவில் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஆட்டோவில் வந்த கும்பல், மூவரையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி தப்பியது. மூவருக்கும் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டது. அங்கிருந்தோர் அவர்களை மீட்டு, வேலப்பன்சாவடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
போரூர் போலீசாரின் விசாரணையில், 'கஞ்சா விற்பனை கும்பல் கைதாக பிரசாந்த் காரணமாக இருந்தார். இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் தாக்குதல் நடந்தது' தெரிய வந்தது. சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்பாக, சம்பவம் நடந்த இடம் குறித்து போரூர், வானகரம் போலீசார் இடையே எல்லை பிரச்னை ஏற்பட்டது. ஒரு வழியாக போரூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.