தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ ஆட்டோவை அடித்து நொறுக்கிய கும்பல் தட்டிக்கேட்ட தம்பதிக்கு சரமாரி வெட்டு

ஆட்டோவை அடித்து நொறுக்கிய கும்பல் தட்டிக்கேட்ட தம்பதிக்கு சரமாரி வெட்டு

ஆட்டோவை அடித்து நொறுக்கிய கும்பல் தட்டிக்கேட்ட தம்பதிக்கு சரமாரி வெட்டு


UPDATED : ஏப் 28, 2026 08:03 PM

ADDED : ஏப் 28, 2026 06:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 28, 2026 08:03 PM ADDED : ஏப் 28, 2026 06:50 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெரும்பாக்கம்: ஆட்டோவை அடித்து நொறுக்கிய போதை கும்பல், தட்டிக்கேட்ட தம்பதியை சரமாரியாக வெட்டி தப்பியது. இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்று பேர் தேடப்பட்டு வருகின்றனர்.

வேளச்சேரி அடுத்த பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் தென்னரசு, 27. இவரது மனைவி மோனிஷா. இவர்கள் ஏப்ரல் 27 ஆம் தேதி இரவு 11:00 மணியளவில் வீட்டில் இருந்தபோது, ஏதோ உடைப்பது போன்ற சத்தம் கேட்டு வெளியில் வந்து பார்த்துள்ளனர்.

அப்போது, 139வது பிளாக் அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோவை, அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள், மது போதையில் அடித்து நொறுக்கி கொண்டிருந்துள்ளனர்.

அவர்களிடம் 'ஏன் ஆட்டோவை உடைக்கிறீர்கள்' என, தென்னரசு தம்பதி கேட்டதற்கு, அவர்கள் இவர்களிடம் தகராறு செய்துள்ளனர்.

பின், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, தம்பதியை சரமாரியாக வெட்டி தப்பினர். இதில், தென்னரசுக்கு தலை, இடது உள்ளங்கை, முதுகு ஆகிய இடங்களில் வெட்டு காயமும், மனைவி மோனிஷாவிற்க்கு இடது கை மணிக்கட்டில் வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது.

அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு பெரும்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஓமந்துாரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த பெரும்பாக்கம் போலீசார், முக்கிய குற்றவாளிகளான, அதே பகுதியைச் சேர்ந்த விக்ரம், 18, சதீஷ், 18, ஆகியோரை கைது செய்து, ஏப்ரல் 28 ஆம் தேதி சிறையில் அடைத்தனர். தலைமறைவாக உள்ள மூன்று பேரை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us